valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 March 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஜய ஜய சத்குரு சாயிநாதா! உம்முடைய திருவடிகளில் நான் நமஸ்காரம் செய்கிறேன். நிர்விகாரமானவரும் அகண்ட சொரூபமான தேவரீர், சரணடைந்தவனின்மீது (என் மீது) கிருபை வையுங்கள். 

சச்சிதானந்தமும் ஆனந்தத்தின் இருப்பிடமாகிய நீரே பிறவிப் பிணியின் இன்னல்களால் அவதியுறும் மக்களுக்கு சுகத்தின் ஆதராம். உம்முடைய அத்வைத போதனை மந்த புத்திகாரனுடைய மனதில் இருந்தும் கூட துவைத மாயையைப் போக்கி விடுகிறது. 

உம்மை எங்கும் நிறைந்தவர் என்றும் ஆகாயத்தைப் போல விஸ்தாரமானவர் என்றும் விவரித்தது மட்டுமல்லாமல், அனுபவத்திலும் கண்டவர்கள் தெய்வ அனுகிரஹம் பெற்றவர்கள். 

சாதுக்களை சம்ரக்ஷணம் செய்வதற்கும் துஷ்டர்களை வேரோடு நாசம் செய்வதற்குமே இறைவன் பூமியில் அவதாரம் செய்கிறான். 

ஞானிகளுடைய அவதாரம் அதனினும் மேன்மையானது. ஞானிகளுக்கு சாதுக்களும் துஷ்டர்களும் சமானமே. ஒருவனை உயர்ந்தவன் என்றும் மற்றொருவனை ஈனாமானவன் என்றும் வித்தியாசப் படுத்த அவர்களுடைய இதயம் அறியாது. ஞானிகளுக்கு இருவரும் சரி சமானமே. 

ஒரு நோக்கில் பார்க்கும்போது, இறைவனை விட ஞானிகள் உயர்ந்தவர்கள். தீனர்களின் மேலுள்ள பிரேமையால், முதலில் அவர்கள் தரும மார்க்கத்திலிருந்து வழி தவறியவர்களை மீண்டும் தருமா நெறிக்கு கொண்டு வருகிறார்கள். 

சம்சார சாகரத்திற்கு ஞானியர் ஓர் அகத்திய முனி. அஞ்ஞான இருளுக்கு ஞாயிறு. பரமாத்மா இவர்களிடமிருந்து வேறுபட்ட வஸ்து இல்லை. இவர்களிடமே வசிக்கிறார். 

என் சாயி இவர்களில் ஒருவர். பக்தர்களின் க்ஷேமத்திற்காக இப்புவியில் அவதரித்திருக்கிறார். அவர் ஞான தேவரின் அவதாரம்; கைவல்லிய (இறைவனோடு ஒன்றுபட்ட நிலை) தேஜஸில் நிலை பெற்றவர். 


No comments:

Post a Comment