valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 6 March 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

ஞானிகளில் சிறந்தவரும் இறைவனின் அவதாரமுமான சாயி இவ்வாறே இருந்தார். அவருடைய பொற்பாதங்களில் சரணடைந்தால், தம் கிருபை செய்யும் கரத்தை உம்முடைய சிரத்தின் மீது வைப்பார். 

எவர் இந்த அத்தியாயத்தை  சிரத்தையுடனும் பக்தியுடனும் நித்திய பாராயணம் செய்கிறாரோ, அவர் சாந்தமான மனநிலையும் ஆபத்துகளிலிருந்து முழு விடுதலையும் அனுபவிப்பார். 

நான் இன்னும் வேறென்ன சொல்லுவேன்.? மனதை தூய்மைப் படுத்திக் கொண்டு நியம நிஷ்டையுடன், விதிக்கப் பட்ட சடங்குகளை செய்து கொண்டு சாயியை முழு மனதுடன்  வழிபட்டால், முழு முதற் பொருளை அடைவீர்கள். 

உங்களுடைய இச்சைகலுங்கூட பூர்த்தி செய்யப் படும். கடைசியில் நீங்கள் நிஷ்காம மானவராக (எதையும் வேண்டாதவராக) ஆகி விடுவீர்கள். இவ்வாறாக நீங்கள் துர்லபமாகிய  (எளிதில் கிடைக்காத) சாயுஜ முக்தி நிலையை (இறைவனுடன் ஒன்றி விடுதல்) அடைவீர்கள். அகண்டமான சாந்தியும் திருப்தியும் உங்கள் இதயத்தை நிரப்பும். 

இக்காரணம் பற்றி, பரமார்த்த சுகத்தை அனுபவிக்க விரும்பும் பக்தர்கள் இந்த அத்தியாயத்தை திரும்ப திரும்ப பாராயணம் செய்ய வேண்டும். 

அம்மாதிரியான பாராயணம் சித்தத்தை தூய்மைப் படுத்தி ஆன்மீக நல்வாழ்வை அளிக்கும். விரும்பாதவைகளும் இன்னல்களும் விரட்டி அடிக்கப் படும். விரும்பினவும் நன்மைகளும் விளையும். பாபாவினுடைய அற்புதமான சக்தியையும் எல்லாரும் அனுபவிக்கலாம். 

பாதங்களில் பணிவதற்கு வந்த அத்தனை பக்தர்களுக்கும், தமக்குப் பதிலாக அவரவர்களின் குருவை தரிசனம் செய்யும் அற்புதமான அனுபவத்தை அளித்தார். சிலருக்கு ஒரு வழி; சிலருக்கு வேறு வழி. ஆயினும், ஒவ்வொருவருக்கும் சொந்த குருவின் மீது உண்டான நம்பிக்கையையும் விசுவாத்தையும் திடப் படுத்தினார். 

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும். ! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு , சாயி பக்தன் ஹேமாட்பந்தால் இயற்றப் பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில், 'ஸ்ரீ சாயி மகிமை வர்ணனை' என்னும் பதினொன்றாவது அத்தியாயம் முற்றும். 



ஸ்ரீ சத் குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 

No comments:

Post a Comment