ஷீர்டி சாயி சத்சரிதம்
அந்த ஞானியை தரிசனம் செய்யவேண்டுமென்ற ஆவல் மூண்டது. ஷீர்டி செல்வதென்று முடிவெடுத்தார். உறவினர் ஒருவருடன் கிளம்பினார்.
தம்முடைய பாதங்களில் பணிவதற்காக அவரை ஷிர்டிக்கு இழுத்தவர் சாயியே! சேவடே எப்பொழுதோ சொன்ன வார்த்தைகள் அப்பொழுது ஞாபகத்திற்கு வந்தது ஒரு நிமித்த காரணமே (சாக்குபோக்கே)! நான் இப்பொழுது சொல்லப்போவதைக் கவனத்துடன் கேளுங்கள்.
தம் இளையசகோதரர் பண்டித ராவையும் கூட்டிக்கொண்டு சபட்னேகர் ஞானி தரிசனத்திற்காக ஷிர்டிக்குக் கிளம்பினார்.
அவர்கள் இருவரும் ஷிர்டிக்கு வந்து சேர்ந்தவுடனேயே சாயிதரிசனத்திற்குச் சென்றனர். தூரத்திலிருந்து பாபாவை தரிசனம் செய்தபோதே மனங்குளிர்ந்தனர்.
தூரத்திலிருந்து பாபாவின் கண்களைச் சந்தித்தவுடன் இருகைகளையும் கட்டிக்கொண்டு விரைவாக அவரருகில் சென்று நின்றனர்.
இருவரும் மிகுந்த பணிவுடன் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தனர். தூய்மையான உள்ளதுடனும் பிரேமையுடனும் ஒரு தேங்காயை பாபாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்தனர்.
தேங்காயை பாபாவின் பாதங்களில் சபட்னேகர் சமர்ப்பித்தபோது, "போ வெளியே" என்று சத்தம் போட்டு பாபா அவரை விரட்டியடித்தார்.
பாபா கோபங்கொண்டதை கண்ட சபட்னேகர் மனக்கலக்கம் அடைந்தார். 'இதற்கு என்ன பொருள் என்பதை, குறிப்பறிந்தவர் யாரையாவது நான் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.' இவ்வாறு தமக்குள்ளேயே சொல்லிக்கொண்டார்.
தரிசனம் செய்து மனமகிழ்ச்சி அடைந்திருக்கவேண்டியவர், சுடுசொல் கேட்டுத் துணுக்குற்றுப் பின்வாங்கினார். வருத்தத்துடன் முகங்கவிழ்ந்து உட்கார்ந்தார்.
'இப்பொழுது யாரிடம் செல்வது? பாபாவின் சுடுசொல்லுக்கு அர்த்தம் என்னவென்று எந்த பக்தரைக் கேட்பது? பாபாவின் என்ன ஓட்டம் என்னெவென்று யாரைக் கேட்பது ?"
அவருடைய நிலைமையைப் புரிந்துகொண்ட யாரோ ஒருவர், அவரை சமாதானப்படுத்தும் வகையில் பாலா சிம்பியின் பெயரை சிபாரிசு செய்தார். ஆகவே, சபட்னேகர் பாலா சிம்மியைத் தேடிச் சென்றார்.
விருத்தாந்தத்தை முழுமையாக பாலா சிம்பியிடம் விவரித்தபின், சபட்னேகர் வேண்டினார், "பாபா உக்கிரமான வார்த்தை பேசி என்னை விரட்டிவிட்டார்.-
"தாங்கள் என்னுடன் வந்தாலாவது எனக்கு சாந்தமான தரிசனம் கிடைக்கலாம். பாபா கோபப்படாமல் நம்மீது கிருபைகனிந்த பார்வையைச் செலுத்த வாய்ப்பு உண்டு".
பாலா சிம்பி இதற்கு ஒத்துக்கொண்டார். சபட்னேகர் சஞ்சலத்திலிருந்து விடுபட்டார். பாபாவின் படம் ஒன்றை வாங்கிக்கொண்டு பாபாவை தரிசனம் செய்வதற்கு கிளம்பினார்.
பாலா சிம்பியும் உடன் சென்றார். படத்தைத் தம்முடைய கையில் வாங்கிக்கொண்டபின், பாபாவிடம் அதைக் கொடுத்துப் பணிவன்புடன் பாலா சிம்பி கேட்டார், -
No comments:
Post a Comment