valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 December 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

யாருக்குப் பொறுப்பாளரோ பாதுகாப்பாளரோ இல்லையோ, அவரை சாயிமாதா ஆதரித்தார். இடுக்கண்ணில் மாட்டிக் கொண்டவர்களும் துன்பப்படுபவர்களும் வேண்டாவென்று ஒதுக்கப்பட்டவர்களும் மசூதியில் புகலிடம் கண்டனர் அல்லரோ?

அந்த வேளையில் படே பாபா (இவருக்குப் பீர் முகம்மது யாசின் என்று பெயர். 1909  ஆம் ஆண்டு ஷிர்டிக்கு வந்தார். பாபாவின் நிழலில் வாழ்ந்தார். பாபாவால் ஆன்மீக முன்னேற்றம் அளிக்கப்பட்ட பக்கீர்களில் இவரும் ஒருவர்)  பக்கத்திலேயே இருந்தார். ஆகவே, பாபா அவரிடம் கூறினார், "இவனைப் பலியிட்டுவிடு. ஒரே வீட்டில் கொன்று விடு!"

படே பாபாவின் மஹிமை பெரிது. பாபாவின் வலப்பக்கந்தான் அவருடைய இடம். படே பாபா சில்லிமை புகைத்த பிறகே பாபா புகைப் பிடிப்பார்.

சாயி பாபாவை பொறுத்தவரை படே பாபா இல்லாமல் ஓர் இலையும் அசையாது. படே பாபா சாப்பிடும்வரை சாயி பாபா சாப்பிடமாட்டார்.

ஒரு சமயம் இவ்வாறு நிகழ்ந்தது. ஒரு தீபாவளிப் பண்டிகையின்போது எல்லா இனிப்புகளும் தட்டுகளில் பரிமாறப்பட்டு எல்லாரும் உண்பதற்காக அவரவர் இடத்தில்அமர்ந்துவிட்டனர். படே பாபா இதை அவமதிப்பாகக் கருதிக் கோபித்துக்கொண்டு வெளியேறினார்.

படே பாபா இல்லாமல் சாயி பாபா உணவைத் தொடமாட்டார். சாயி பாபாவே தொடாதபோது மற்றவர்கள் என் செய்வர்?

ஆகவே, அனைவரும் பொறுமையாக காத்துக்கொண்டிருந்தனர். சிலர் படே பாபாவைத் தேடி அழைத்துக்கொண்டு வந்தனர். படே பாபுவுடன் சேர்ந்தே சாயி பாபா உணவுண்டார்.

சொல்லவந்த கதையை விட்டுவிட்டு, பாதை விட்டு விலகிச் சென்றாவது வேறு விவரங்களை சொல்லவேண்டுமென்ற உந்துதல் எனக்கு ஏற்படுகிறது.

படே பாபா பாபாவின் விருந்தாளி. போஜன (சாப்பாட்டு) நேரத்தில், பாபா எப்பொழுது கூப்பிடப்போகிறார் என்று அவர் சபா மண்டபத்தில் காதைத் தீட்டிக்கொண்டு காத்திருப்பார்.

போஜனம் செய்வபர்கள்  இரண்டு வரிசைகளாக உட்காருவார். பாபா இரண்டு வரிசைகளின் நடுவே ஒரு கோடியில் அமருவார். படே பாபாவுக்கு பாபாவின் இடப்பக்கத்தில் இடம் ஒதுக்கப்பட்டது.

நிவேதனம் செய்யப்பட்ட பொருள்கள் அனைத்தும் தட்டுகளில் பரிமாறப்படும். தட்டுகள் இரண்டு பந்திகளாக வைக்கப்படும். போஜன நேரம் நெருங்கியவுடன் அனைவரும் அவரவர் இடங்களில் அமருவர்.

பாபா, மிக்க மரியாதை தொனிக்க, 'படே மியா' என்று உரக்கக் கூப்பிடுவார். இக்குரலைக் கேட்டவுடனே படே பாபா வணக்கம் தெரிவித்துக்கொண்டே படியேறி வருவார்.

எக்காரணமுமின்றி அன்னத்திற்குப் புறங்காட்டி கோபப்பட்டு வெளியேறியவர்க்கு என்ன மரியாதை வேண்டிக் கிடக்கிறது? அன்னத்தை அவமானம் செய்தவருக்கு சன்மானம் எதற்கு? 


No comments:

Post a Comment