valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 November 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

காலராவைக் கண்ட ஷிர்டிவாழ் மக்கள் மரணபீதி  அடைந்தனர். கொள்ளைநோய் விலகும் வரை வெளிமனிதர்களிடம் எந்த உறவும் வைத்துக்கொள்ள விரும்பவில்லை. வர்த்தகமும் போக்குவரத்தும் செய்தித் தொடர்பும் உறைந்துபோயின.

காலரா நோய் இருக்கும்வரை எவரும் ஆடு வெட்டக் கூடாது. வெளியில் இருந்து கிராம எல்லையைத் தாண்டி வண்டி ஏதும் ஊருக்குள் வரக்கூடாது. அனைவரும் கிராம எல்லையைத் தாண்டி வண்டி ஏதும் ஊருக்குள் வரக்கூடாது. அனைவரும் இந்த விதிகளை கண்டிப்பாகக் கடைபிடிக்க வேண்டுமென்று எதிர்பார்க்கப்பட்டது.

பாபாவுக்கோ கிராம மக்களின் இம் மூடநம்பிக்கை ஒப்புதல் இல்லை. இம் மூட நம்பிக்கைகள் மக்களுடைய அஞ்ஞானத்தைப் பிரதிபலிக்கின்றன என பாபா அபிப்ராயப்பட்டார்.

ஆகவே, ஒரு பக்கம் கிராம மக்கள் சட்டதிட்டங்களை விதித்திருந்தபோது, மறுபக்கம் பாபா அவற்றை உடைத்துக் கொண்டிருந்தார். எப்படியெல்லாம் உடைத்தார் என்பது பற்றி கவனமாக கேளுங்கள்.

கிராமப் பஞ்சாயத்து விதித்த சட்டதிட்டங்களை மக்கள் நேர்மையுடன் அனுசரித்தனர். யாரேனும் சிறிதளவு மீறினாலும், அபராதம் கட்டிய பிறகே விடுவிக்கப்படுவார்.

பாபாவுக்கோ அபராதம் பற்றிய பயமேதுமில்லை. அவர் சதாசர்வகாலமும் நிர்ப்பயமாக இருந்தார். ஹரியின் பாதங்களில் லயித்துவிட்ட மனதை எவராலும் எக்காலத்தும் வெல்லமுடியாது!

இந்த சமயத்தில், விறகுகள் ஏற்றப்பட்ட பாராவண்டியென்று கிராமத்தின் எல்லயைக் கடந்து உள்ளே வந்தது. இது பிரச்சினையைக் கிளப்பியது; ஜனங்கள் வாக்குவாதம் செய்தனர்.

கிராமத்தில் எரிபொருளுக்குப் பஞ்சம் இருந்தது என்பது கிராம மக்களுக்குத் தெரிந்திருந்தது. ஆயினும், காலரா காலத்தில் பஞ்சாயத்து இட்ட கட்டுப்பாட்டை எங்கனம் மீறுவது? மக்கள் செய்வதறியாது விழித்தனர்.

வண்டியோட்டியை மிரட்டி வண்டியைத் திருப்பியனுப்பிவிட முயன்றனர். செய்தி பாபாவை எட்டியது; உடனே பாபா அவ்விடத்திற்கு விரைந்தார்.

பாபா வண்டியின் முன்னே சென்று நின்றார். இதைக் கண்டவுடன் வண்டியோட்டியின் தைரியம் மேலோங்கியது; கிராம மக்களின் எதிர்ப்பு உடைந்தது. விறகு வண்டி எல்லையைத் தாண்டி ஷிர்டிக்குள் நுழைந்தது!

வண்டியை அங்கிருந்து நேராக மசூதியின் சபாமண்டபத்திற்கு ஒட்டி விறகை அங்கு இறக்கிவிடும்படி சொன்னார் பாபா. எவரும் ஒரு வார்த்தையும் பேசவில்லை.

கோடைகாலமோ, குளிர்காலமோ, இலையுதிர்காலமோ, வசந்தகாலமோ, மழைக்காலமோ, - ஆண்டு முழுவதும் மசூதியில் பாபா துனியை (புனிதத் தீ) வளர்த்து வந்தார்.

பாபாவின் மனோதிடம் விசித்திரமானது! அக்கினிஹோத்திரம் செய்யும் பிராமணர்களின் வேள்வித்தீயை போன்று, பாபாவின் துனி இரவு பகலாக அணையாமல் எரிந்து கொண்டிருந்தது!

No comments:

Post a Comment