valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 20 September 2012

ஷிர்டி சாய் சத் சரிதம்

கதாகாலட்சேபம் தடங்கலின்றி நடக்குமோ, நடக்காதோ!" என்று அவர் கவலையுற்றார்.

நரம்புத் தளர்ச்சியினால் கால் கனத்துப் போக, மசூதியின் படிகளை தடுமாறிக் கொண்டே ஏறினார்.

பாபா அவரை, 'தொட்டில் எதற்காகக் கட்டப்பட்டிருக்கிறது' என்று வினவினார். கதாகாலட்சேபதைப் பற்றியும் கொண்டாட்டத்தில் விவரங்களும் சுருக்கமாக சொல்லப்பட்டவுடன் பாபா மகிழ்ச்சி யடைந்தார்.

பாபா, அருகிலிருந்த சுவர் மாடத்திலிருந்து ஓர் அழகான மாலையை எடுத்து காகாவின் கழுத்தில் அணிந்தார். பீஷ்மா அணிவதற்காக இன்னொரு மாலையை அவரிடம் கொடுத்தார்.

பாபா தொட்டிலைபற்றிக் கேட்ட கேள்வி எல்லாரையும் சஞ்சலப் பட வைத்தது. ஆனால், பாபா காகாவுக்கு மாலை அணிவித்ததைப் பார்த்ததும், எல்லாரும் நிம்மதி, பெருமூச்சு விட்டனர்.

பீஷ்மா கல்விகேள்விகளில் வல்லவர்; இதிஹாச புராணங்களை நன்கு அறிந்தவர், ஆகையால் அவருடைய காலட்சேபம் மிகவும் ரசிக்க கூடியதாக அமைந்தது. கேட்டவர்கள் அபரிதமான ஆனந்தமடைந்தனர்.

பாபாவின் முகம் பிரசன்ன வதனம் ஆயிற்று (மலர்ந்தது). எவ்விதமாக அனுமதி தந்தாரோ, அவ்விதமாகவே பக்தர்களை பஜனையுடனும் காலத்ஷேபதுடனும் கொண்டாட்டத்தை நடத்தும்படி செய்தார்.

காலத்ஷேபத்தில் ஸ்ரீ ராம ஜனன கட்டம் வந்தபோது குலால் என்னும் வர்ணப் போடி எங்கும் தூவப் பட்டது. அதில் சிறிது பாபாவின் கண்ணில் விழுந்து விட்டதால், கௌசல்யாவின் அரண்மனையில் குழந்தையாக இருப்பதற்குப் பதிலாக, பாபா நரம்சிம்ஹா அவதாரம் எடுத்து விட்டார்.

ஆனால், வர்ணப் போடி கண்ணில் விழுந்ததென்னவோ ஒரு சாக்குதான். ஸ்ரீ ராம அவதாரத்தில் மகா விஷ்ணு ராவணனை வதம் செய்து ராக்ஷசர்களின் கொடூரச் செயல்களை அழித்ததை, காலஷேபம் நடந்த நேரத்தில் பிரதிபளிப்பதற்காகவே அவர் கோபாவேசம் கொண்டார்.

உக்கிர நரசிம்ஹரைப் போல திடீரென்று கோபம் பொங்கி எழுந்தது; சாபங்களையும் வசவுகளையும் சரமாரியாகப் பொழிந்து தள்ளி விட்டார்.

தொட்டில் தூள்தூளாக போகிறதென்று நினைத்து ராதாகிருஷ்ணபாயி மிகவும் அதிர்ந்து போய் விட்டார். எப்படி அந்தத் தொட்டிலைக் காப்பாற்றுவது என்பது அவருக்குப் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது.

தொட்டிலைச் சீக்கிரமாக அவிழ்த்து விட வேண்டுமென்று அவரசரபடுதித் திரும்ப திரும்ப தொந்தரவு செய்தார். ஆகவே, காகா மகாஜனி தொட்டிலை அவிழ்ப்பதர்க்குச் சென்றார்.

இது பாபாவை மிகவும் எரிச்சலூட்டியது. அவர் பயங்கரமாகவும் காகாவை அடிக்கப் போவது போலவும் ஆக்ரோஷத்துடன் தொட்டிலை நோக்கி ஓடினார். தொட்டிலைக் கழற்றும் முயற்சி நிறுத்தப்பட்டது; பாபாவும் அமைதியடைந்தார்.

பின்னர், பிற்பகலில் தொட்டிலை அவிழ்க்க அனுமதி வேண்டப் பட்டபோது பாபா ஆச்சரியத்துடன் வினவினார், "இப்போது எப்படி தொட்டிலை இறக்கி விடுவது? இன்னும் அதற்குத் தேவை இருக்கிறது!"


No comments:

Post a Comment