valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 16 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

பாபாவுக்குக்  கீழ்படியாததன் விளைவுகள் - பாபா பிச்சை எடுத்தது ஏன் ? இல்லறத்தோரின்  ஐந்து பாவங்களும் (பஞ்ச சூனா ) பாவ நிவிர்த்தியும் - தர்கத் தம்பதியின் பக்தி

முந்தைய அத்தியாத்தின் கதையைத் தொடரும் விதமாக, பாபாவின் அனுமதியின்றித் தம் தம் இல்லங்களுக்குத் திரும்பிச் செல்ல முயன்றவர்கள், எவ்வாறு சங்கடங்களுக்கும் இன்னல்களுக்கும் உள்ளானார்கள் என்பதை விவரிக்கிறேன்
அதுபோலவே, இல்லறத்தோரின்  பஞ்சசூனா போன்ற பாவங்களை நிவர்த்தி செய்யும் விதமாகவும் மக்களுக்கு நன்மையளிக்கும் விதமாகவும் பாபா மதுகரி* பிச்சை எடுத்துப் பிழைத்ததையும் சொல்கிறேன்.

மேலும் படைக்கும் தெய்வமாகிய பிரம்மாவிலிருந்து புல்  பூண்டு வரை சாயி எவ்வாறு எங்கும் வியாபித்துள்ளார் என்பதையும், சாயியே அருள்கூர்ந்து இறைவன் எங்கும் நிறைந்திருப்பதை நம்முடைய மனத்தில்  பதியுமாறு செய்ததையும் சொல்கின்றேன்.

ஆகவே, என்னிடம் கதை கேட்கும் மக்களே! நீங்கள் கவனத்துடன் கேட்கவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன் . ஏனெனில், இப்புனிதமான கதைகளை சிரத்தையுடன் கேட்டால் ஷேமமடை வீர்கள்.

ஷிர்டிக்குச் செல்லும் புனிதப் பயணம் ஒரு லக்ஷணத்தை உடையது. பாபாவினுடைய  அனுமதியின்றிப் புனிதப் பயணி எவரும் வீடு திரும்ப முயன்றால் அவர் விக்கினங்களையே  எதிர்கொள்வார்.

வீடு திரும்ப அனுமதி கிடைத்தவர் ஷீரடியில் மேற்கொண்டு தங்கினாலும், சிரமங்களை அனுபவிப்பார். இதை எல்லாருமே நடைமுறையில் பார்த்துவிட்டனர்.

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
மதுகரீ என்னும் வார்த்தைக்குத் தேன் செய்யும் (வண்டு) என்று பொருள். தேனீ எவ்வாறு ஒவ்வொரு மலராகச் சென்று தேன்  செய்வதற்குண்டான மகரந்தத்தை சேகரிக்கிறதோ , அவ்வாறே பிச்சை எடுத்துப் பிழைப்பவர் ஒரே இல்லறதானைத் தொந்தரவு செய்யாமல், வீடுவீடாகச் சென்று பல இல்லங்களிலிருந்து உணவைத் தேடிக்கொள்வதே  மதுகரீ பிச்சை எனப்படும்.


No comments:

Post a Comment