valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 October 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

"என்னுடைய நாமத்தை தியானம் செய்; என்னிடம் சரணடைந்து விடு" என்று பாபா எல்லாரிடமும் திரும்பச் திரும்பச் சொன்னார். தம்மை யாரென்று தெரிந்து கொள்வதற்காக தம்முடைய கதைகளை கேட்டு அவற்றின் மீது சிந்திக்கச் சொன்னார்.

சிலரை பகவன் நாமஸ்மரணம்  செய்யச் சொன்னார். சிலரை பகவானுடைய லீலைகளைக் கேட்கச் சொன்னார். சிலரை பகவானுடைய பாதங்களுக்குப் பூஜை செய்யச் சொன்னார். இவ்வாறு அவர் பக்தரின் ஆன்மீகத் தகுதிக்கேற்றவாறு வெவ்வேறு விதிகளையும்  வழிமுறைகளையும் நியமனம் செய்தார்.

ஒருவரை அத்யாத்ம இராமாயணம் படிக்கச் சொன்னார். மற்றொருவரை சடங்கை முன்வைத்து ஞானேச்வரி படிக்கச் சொன்னார். வேறொருவரை ஹரிவ்ரதம் படிக்கச் சொன்னார். இன்னொருவரை குரு சரித்திரம் படிக்கச் சொன்னார்.

ஒருவரைத் தம்முடைய காலடியிலேயே கிடக்கச் சொன்னார். அச்சமயத்திலேயே அடுத்தவரை கண்டோபா கோயிலுக்கு அனுப்பினார். வேறொருவர் மீதிருந்த அளப்பரிய அன்பினாலும் அக்கறையாலும் அவரை ஸ்ரீ விஷ்ணு  சஹஸ்ர நாம பாராயணம் செய்ய வைத்தார்.

ஒருவர் 'ராம விஜயம்' படிக்கும்படி உபதேசம் செய்யப்பட்டார். மற்றொருவருக்கு நாமத்தினுடைய மஹாத்மியமும் தியானத்தினுடைய முக்கியத்துவமும் விளக்கப்பட்டது. வேறொருவர் சாந்தோக்கிய உபநிஷத்தையும் கீதா ரஹஸ்யத்தையும் விசுவாசத்துடன்  படித்து சுவாரசியத்தை அனுபவிக்கும்படி அறிவுரை வழங்கப்பட்டார்.

ஒருவருக்கு ஒன்று, மற்றொருவருக்கு வேறு. தீக்ஷை அளிக்கும் வலிகள் எண்ணிலடங்கா. சிலருக்குப் பிரத்யஷக்ஹமாகவே (நேருக்கு நேர்) உபதேசம். சிலருக்கு திருஷ்டாந்தமாக (உருவக கதைகள் மூலமாக) உபதேசம். அவருடைய உபதேசப் புதினம் அபூர்வமானது!

அனைத்து இனத்தினரும் ஜாதியினரும் அவரை தரிசனம் செய்ய ஓடிவந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஒருவரின் கனவிலும் ஆர் தோன்றினார்.

அவருடைய மார்பின் அமர்ந்துகொண்டு கைகளாலும் கால்களாலும் அவரை அமுக்கினார். குடிகாரர் தம்முடைய கைகளைக் காதுகளில் வைத்துக்கொண்டு இனி மதுவை தொடமாட்டேனென்றும் அறவே விட்டு விடுவேனென்றும் பிரமாணம் செய்த் பின்னரே அவரை விடுதலை செய்தார்.

கலியாண வீட்டுச் சுவரில் ஜோதிடர்கள் விஷ்ணு, சிவன், ஆகிய தெய்வங்களின் ஓவியங்களை வரைவதுபோல 'குரு பிரம்மா' போன்ற மந்திரங்களை பக்தருக்காக அவருடைய கனவில் பாபா எழுதுவார். 


No comments:

Post a Comment