valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

உடனே பாபா கூரையின் மறுபக்கச் சார்பில் இறங்கி, விளிம்பிற்கு வந்து, அதே ஏணியை அங்கே கொண்டுவரும்படி செய்தார். ஏணியை உபயோகித்துக் கீழே இறங்கிவிட்டார்.

கால் பூமியில் பட்டவுடனே ஏணியின் சொந்தக்காரருக்கு கணநேரமும் தாமதியாமல் இரண்டு ரூபாய் உடனடியாகக் கொடுத்தார்.

அவர் செய்த வேலை இரண்டு இடங்களில் ஏணியைச் சார்த்தியதை தவிர வேறெதுவுமில்லை. அதற்கென்ன பாபா அவருக்கு அவ்வளவு தாராளமாகப் பணம் கொடுத்தார்?

இயல்பாகவே மக்கள் ஆவலுற்றனர். ஒருவர் சொன்னார், "ஏணியின் சொந்தக்காரருக்கு இவ்வளவு பணம் ஏன் கொடுத்தீர்கள் என்று பாபாவைக் கேளுங்கள்."

அவர்களில் ஒருவர் தைரியம் கொண்டு கேட்டார். பாபா பதிலுரைத்தார். "சிறிதளவாயினும், யாருடைய உழைப்பையும் இலவசமாகப் பெற்றுக் கொள்ளாதே."-

"யாருடைய உழைப்பையும் எப்பொழுதும் இலவசமாகப் பெறக்கூடாது என்னும் விதியைக் கடைப்பிடி. மற்றவர்களிடம் வேலை வாங்கி கொள். ஆனால், அவர்களுடைய உழைப்பு எவ்வளவு என்பதை அறிந்துகொள்".

இவ்வாறு பாபா செய்ததன் நோக்கமென்ன எனப்து யாருக்குத் தெரியும்? அது அவர் ஒருவருக்குத்தான் தெரியும். ஞானிகளுடைய மனம் திறக்க முடியாத பெட்டியன்றோ!

அவருடைய திருவாய்மொழியே நமக்கு சகல ஆதாரமும். அவர் சொன்னபடி நடந்தால், தடங்கல்கள் ஏதுமின்றி வாழ்க்கை சுமுகமாக நடக்கிறது.

அடுத்த அத்தியாயம் இதைவிட இனிமையானது. வீட்டு வேலை செய்யும் ஒன்றுமறியாத சிறுமி ஒருத்தி, வேதத்திலிருந்து எழுந்த, திகைக்க வைக்கும் சந்தேகத்திற்கு விளக்கம் அளிக்கப்போகிறாள்!

தாசகனு ஒரு தெய்வ அருள் பெற்ற ஹரிதாஸர் (கதாகீர்த்தனம் செய்பவர்), சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில், ஈசாவாஸ்ய உபநிஷதத்தை மராத்தியில் மொழிபெயர்த்து வழங்க அவர் விரும்பினார்.

சாயியினுடைய அருளால் அந்நூலை எழுதிமுடித்தார். ஆயினும், உபநிஷத்தின் ரகசியமான அர்த்தம் தமக்குப் பிடிபடவில்லையோ  என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. பாபா அந்தப் பிரச்சினையை எப்படித் தீர்த்துவைத்தார்?

ஷிர்டியில் உட்கார்ந்துகொண்டே பாபா கூறினார், "நீர் விலேபார்லேவுக்கு செல்லும்போது, காகாவின் (ஹரிசீத்தாராம் தீக்ஷிதரின்) வீட்டு வேலைக்காரி உம்முடைய ஸந்தேஹத்தைத் தீர்த்துவைப்பாள்".


No comments:

Post a Comment