valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 November 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

யாராவது யோகாசனங்களையோ அல்லது ஹடயோகத்தின் மற்றப் பயிற்சிகளையோ திருட்டுத்தனமாகப் பழகினால், பாபாவுக்கு அது உள்ளுணர்வால் தெரிந்துவிடும்; சொல்லம்பினால் அதை அவருக்குத் தப்பாது தெரிவித்து விடுவார்.

முன்பின் தெரியாத ஒருவருடைய கையை பிடித்துக்கொண்டு, 'நீ சோளரொட்டியை தின்று விட்டு சும்மா இருக்கமாட்டாயா? பொறுமையை  கடைப்பிடி! என்று கண்டனச் செய்தி சொல்லுவார்.

யாரோ ஒருவருக்கு நேரிடையாக அதிகார தோரணையில் சொன்னார், "நாங்கள் கண்டிப்பு மிகுந்த, இரக்கமில்லாத ஜாதி, ஓரிருமுறை சொல்லிப்பார்ப்போம். திருந்தாவிட்டால் கடுமையான தண்டனை கொடுப்போம்.-

"எம்முடைய சொல்லக் கேட்காதவனை இரண்டாகத் துண்டித்து தூக்கியெறிந்து விடுவோம்; எம் குழந்தையாக இருப்பினும் சரி." (பிறந்தவுடனே சிசுவின் தொப்புள் கொடியை அறுத்துவிடும் செய்கை இங்கு உபமான படுத்தப்படுகிறது. )


சாயிபாபா பேரறிவு படைத்த மஹானுபவர்; அவருடைய சாமர்த்தியமான செயல்களை பாமரனாகிய நான் எவ்வாறு வர்ணிக்க முடியும்? சிலருக்கு அவர் ஞானத்தையும் துறவு மனப்பான்மையும் அளித்தார்; சிலருக்கு நன்னெறியையும் பக்தியையும் அளித்தார்.

சிலரை, பிறர் போற்றும் வகையில் உலக வாழ்க்கையை மங்களமாக நடத்துமாறு ஒழுங்குபடுத்தினார். இது விஷயமாக கதை கேட்பவர்களுக்கு ஒரு சுவையான நிகழ்ச்சியை உதாரணமாக சொல்லுகிறேன்.

ஒருநாள் உச்சிவேளையில், எதிர்பாராதவிதமாக ராதாகிருஷ்ணமாயியின் வீட்டுக்கருகில் பாபா வந்தார். பாபா மனதுள் என்ன வைத்திருந்தாரோ தெரியவில்லை.

அங்கே சிலர் அவருடன் இருந்தனர்; பாபா அவர்களை ஏவினார், "கொண்டுவா, உடனே ஓர் ஏணி கொண்டு வா!" அவர்களில் ஒருவர் உடனே சென்று ஓர் ஏணியைக் கொண்டுவந்து அங்கு வைத்தார்.

பாபா அந்த ஏணியை வீட்டின்மீது சார்த்திக் தாமே கூரையின் மீது ஏறினார். அவர் மனதில் என்ன திட்டம் வைத்திருந்தார் என்பது எவருக்கும் தெரியாது.

அந்த நேரத்தில் ஏணியானது வாமன் கோந்தக்கருடைய வீட்டின்மேல் சார்த்தப்பட்டிருந்தது. ஸ்ரீ சாயி கிடுகிடுவென்று ஏணியில் ஏறிக் கூரையை அடைந்தார்.

அங்கிருத்து, அவர் கோன்தகரின் பக்கத்து வீடான ராதா கிருஷ்ணா பாயியின் வீட்டுக் கூரைக்கு சென்றார். அந்த கூரையையும் சடுதியில் கடந்தார். யாருக்கும் இந்த மர்மம் என்னெவென்று  புரியவில்லை.

ஆனால், அந்த நாளில் ராதா கிருஷ்ணபாயி குளிர்காய்ச்சலில் நடுங்கி கொண்டு அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தாள்.

பக்கத்துக்கொருவராக, இருவர் தங்கினால் பாபாவால் நடக்க முடியும். அவ்வளவு பலஹீனமானவருக்கு இவ்வளவு பலம் எங்கிருந்து வந்தது? 


No comments:

Post a Comment