valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 17 March 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஆன்மீக அதிகாரத்திற்கு ஏற்றவாறு, எள்ளளவும் புத்தி பெதளிக்காத வகையில், பாபா ஒவ்வொரு பக்தருக்கும்  அவருக்கேற்ற உபதேசத்தை அளித்து ஆன்மீகப் பாதையில் நடைபோட வைக்கிறார்.

குரு தங்களுக்கு என்ன திருவாய் மொழி  அருளினார் என்பஹை மற்றவர்களிடம் சொல்லக்கூடாது என்று பலர் நினைக்கின்றனர். அவ்வாறு செய்தால் குருவின் திருவாய்மொழி பயனற்றுப் போகும் என்றும் நம்புகின்றனர்.

இது ஏறும் கற்பனையே. ஒன்றுமில்லாதததைப் பெரிதுபடுத்தும் சமாசாரம்; ஆகவே, அர்த்தமற்றது. உண்மையில், நேரடியாகச் செய்யப்பட்ட ஆன்மீக போதனைகளை மட்டுமல்லாமல் கனவில் தோன்றிய போதனைகளையும் மற்றவர்களுக்குச் சொல்ல வேண்டும். அது பயன்தரக்கூடிய , நல்ல ஞானம்.

இவ்வப்பிராயத்திற்கு பிரமாணம் ஏதும் இல்லை என்று நினைப்பவர்கள், புத்த கௌசிக ரிஷியே இதற்குப் பிரமாணம் என்பதை அறியவும். தமக்குக் கனவில் அளிக்கப்பட்ட உபதேசத்தை 'ஸ்ரீ ராம ரக்ஷா தோத்திரம்' என்னும் உருவத்தில் அனைவருக்கும் அளித்துவிட்டார் அவர்.

குரு எல்லா ஜீவன்களின்மீதும் ஆனந்த மழை பொழியும் கனத்த மழைக் காலத்து மேகமாவார். இவ்வானந்தம் மறைத்தோ பதுக்கியோ வைக்கவேண்டிய பொருளா என்ன? இல்லவே இல்லை! இதயம் நிரம்புவரை அனுபவித்துக் கொண்டே மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.

ஒரு தாய், முகவாய்க்கட்டையை மென்மையாக தூக்கிக் குழந்தையை மருந்து குடிக்க வைக்கிறார். அனைத்தும் குழந்தையினுடைய ஆரோக்கியதிற்காகவே, இது போன்றதே பாபா உபதேசம் செய்யும் திறமையும் முறையும்.

அவருடைய பதை மர்மமானதோ இரஹசியமானதோ அன்று. எவ்வாறு, எவ்விதமான வழிமுறைகளைக் கையாண்டு பக்தர்களுடைய மனோரதத்தை அவர்கள் எதிர்பாராதவிதமாக பாபா பூர்த்தி செய்தார் என்பதை கவனத்துடன் கேளுங்கள்.

சத்குருவின் சந்தகம் புனிதமானது! அதனுடைய மகத்துவத்தை எவரால் தேவையான அளவிற்கு விவரிக்க முடியும்? அவருடைய திருவாய் மொழி ஒவ்வொன்றாக சேகரிக்கபடும்போது, மற்றவர்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும் என்கிற உற்சாகம் கரைபுரள்கிறது.

ஈசுவரனை பிரேமையுடன் வழிபடுவதாலும், குருவிற்கு சேவைசெய்துpooai செய்வதாலும், குருவால் அளிக்கமுடிந்த ஞானத்தை பெற்றுக்கொள்ளலாம். இது விஷயத்தில் வேறெந்த முயற்சியும் வியர்த்தமே.

விஷேபமும் (பொய், மெய்போலத் தோன்றுவது) ஆவரணமும் (மெய்யைத் திரை போட்டு மறைத்தல்) வாழ்க்கைப் பாதையை மங்கலாகவும் குழப்பமாகவும் ஆகிவிடுகின்றன. குருவின் திருவாய் மொழியே வாழ்க்கைப்பாதையில் தடங்கல் இல்லாமல் நடக்க உதவும் ஒளிவிளக்காகும்.

குரு பிரத்யக்ஷமான கடவுள்; குருவே பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனும் ஆவார். உண்மையில் குருராயரே முழுமுதற்கடவுளாவார். 


No comments:

Post a Comment