valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 5 March 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

கருணாசாஹரமான சாயிநாதர், பேராசையால் பீடிக்கப்பட்ட மனித இனத்தை அவர்களுடைய நல்வாழ்வை மனதிற்கொண்டு, கைகொடுத்துத் தூக்கி விடுதலை செய்கிறார். 

தைத்ரியோப நிஷதத்தின் பதினொன்றாவது அனுவாகம் (செய்யுள் தொகுப்பு) தானத்தைப் பற்றிய பல ஆணைகளை இடுகிறது. ஒவ்வொன்றையும் கவனமாகக் கேளுங்கள். 

"முதலாவதாக, தானம் சிரத்தையுடன் கொடுக்கப் பட வேண்டும். அசிரத்தையுடன் கொடுக்கப்படும் தானதிற்குப் பலனேதும் இல்லை. அரசனுடைய ஆணைக்கோ அல்லது சாஸ்திர விதிகளுக்கோ பயந்துகொண்டு கொடுக்க வேண்டும். வெட்கத்திற்குப்  பயந்து சிறிதாவது கொடுக்கவேண்டும்".

திருமணம் போன்ற சுபமான நிகல்சிகளின்போது, நட்பின் தாக்ஷின்னியத்தை நிறைவேற்றுவதற்காகவது  ஏதாவது ஒரு பரிசு அளிக்கப்பட வேண்டும். உலக விவகாரங்களின் படிப்பினை இதுவே. 

பாபாவும் தம் பக்தர்களிடம் அவர்களுடைய நன்மைக்காக 'த' என்னும் எழுத்தால் (உபநிஷத்தால் ) குறிப்பிடப்பட்டதையே  கேட்டார். 'புலனடக்கதுடன் வாழுங்கள்; தயை காட்டுங்கள்; தானம் செய்யுங்கள்; உங்களுக்கு அமோகமான மகிழ்ச்சி விளையும்".

குருராயர் இந்த ஓர் எழுத்து மந்திரத்தை தம் சிஷ்யர்கள் மூன்று தோஷங்களில் இருந்தும் விடுபடவேண்டும் என்பதற்காகவே உபயோகித்தார். 

காமம், கோபம், பேராசை ஆகிய தோஷங்களை வெல்வது  கடினம்.இம்மூன்றும், தன்னையே  உயர்த்திகொள்ளும் பாதைக்கு ஒவ்வாதன. ஆகவே, இந்த சுலபமான வழி பரிந்துரைக்கபட்டது. 

வேதங்களில் சொல்லப்பட்டவாறே ஸ்மிருதிகளிலும் (வாழ்க்கை நெறி நூல்களிலும்) சொல்லப்பட்டிருக்கிறது. ஆயினும், கேட்பவர்கள் திடமாகப் பிரிதிடைவதற்காக  அதை நான் இங்கே தருகிறேன்.

"மனிதனுடைய ஆத்மாவை அழித்துவிடும் நரகத்தின் வாயில்கள் மூன்று வகைப்படும்; காமம், கோபம், பேராசை - ஆகவே, இம்மூன்றையும் மனிதன் துறந்து விட வேண்டும்; 
                                                         ஸ்ரீமத்  பகவத் கீதை - அத்தியாயம் 16 - சுலோகம் 21
காமம், கோபம், பேராசை இம்மூன்றும் ஆத்ம நாசத்தை உண்டுபண்ணும் நரகத்தின் வாயில்கள் என அறிந்துகொள். ஆகவே, இம்மூன்றையும் முற்றும் துறந்துவிடு. 

பரம தயாளரான சமர்த்த சாயி, தம்முடைய பக்தர்களின் நலனுக்காகவே தக்ஷிணை கேட்டு வாங்கினார். அவர்களுக்குத் தியாகம் செய்யவேண்டுமென்றே படிப்பினையைச் சொல்லிக் கொடுத்தார். 

தக்ஷினையால் அவருக்கு என பெரிய பிரயோஜனம்? குருவினுடைய ஆணைக்குக் கட்டுப்பாடு உயிரையும் கொடுக்கத் தயாராக இல்லாதவனுடைய ஆன்மீக வாழ்வு எப்படி உயர்வானதாகும்?




No comments:

Post a Comment