valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 May 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

"பாபா! இப்பொழுது  நான் அவசரமாகக் கிளம்பவில்லை எனில் பம்பாய் செல்லும் ரயிலைக் கோட்டை விட்டு விடுவேன் என்னுடைய உத்தியோகத்திற்கு குந்தகம் விளைந்து விடும் யஜமானர் என்னை நிச்சயமாக வேலையிலிருந்து  நீக்கிவிடுவர்." (பக்தரின் கவலை)

"இங்கு வேறு யஜமானர் எவரும் இல்லை! போய்  ஒரு சோள  ரொட்டியாவது சாப்பிடு மதிய உணவு உண்டபிறகு போ! (பாபாவின் பதில்)

இந்த ஆக்ஞையை  மீறுவதற்கு எவருக்கு தைரியம் இருந்தது? சிறியவர்கள், பெரியவர்கள், விவேகமுள்ளவர்கள், நல்லது-கெட்டது  தெரிந்தவர்கள், அனைவரும் சுயானுபவத்தால்  உண்மை நிலையை அறிந்திருந்தனர்.

பாபாவினுடைய  ஆக்ஞைக்கு அடிபணிந்தவர்கள் ரயிலை ஒருபோதும் தவற விட்டதில்லை ஆக்ஞையை அலட்சியம் செய்தவர்கள் நிச்சயமாக பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் எதிர்கொண்டார்கள்
இம்மாதிரி  அனுபவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக எத்தனை எத்தனையோ! ஒவ்வொன்றும் புதியது தனித்தன்மை வாய்ந்தது. இவற்றைச் சுருக்கமாக சொல்லுவேன்.

ஹெமாத் இப்பொழுது சாயி பாதங்களில் சரணடைகிறேன் அடுத்த அத்தியாயத்தில், ஷிர்டியில் இருந்து வீடு திரும்புவதற்கு பக்தர்கள் பாபாவின் அனுமதியைப் பெற வேண்டியதின் முக்கியத்துவம் விவரிக்கப்படும்.

பாபாவினுடைய  அனுமதி பெற்றவர்கள் வீடு திரும்பியதையும், அனுமதி கிடைக்காவதர்கள் ஷிர்டியிலேயே தங்கிவிட்டதையும், பாபாவின் ஆக்கையை மதிக்காதவர்கள் எவ்வாறு அபாயங்களில் மாட்டிக்கொண்டனர் என்பதையும் அடுத்த அத்தியாயத்தில் விவரிக்கிறேன்
அதுபோலவே, பாபா எவ்வாறு மதுகரீ பிக்ஷை எடுத்தார் என்பதுபற்றியும், ஏன் பாபா பிச்சை எடுத்து உண்டார் என்பது பற்றியும் பஞ்சசூனா பாவ நிவர்திபற்றியும் பிற்பாடு விளக்கப்படும்
ஆகவே கதை கேட்பவர்களின் பாதங்களைப் பற்றிக் கொண்டு மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். ஒவ்வொரு கணமும் கவனத்துடன் உங்களுடைய நன்மைக்காகவும் நல்வாழ்வுக்காவும் சாயி சரித்திரத்தை கேளுங்கள்.

எல்லாருக்கும் சேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாத் பந்தால் இயற்றப் பட்ட "ஸ்ரீ சமர்த சாயி சத் சரிதம்" என்னும் காவியத்தில், "நரஜன்ம மகிமை - பிச்சை எடுத்து உண்டது - பாயஜாபாயியின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மகால்சாப்தியுடனும் மசூதியில் உறங்கியது" என்னும் எட்டாவது அத்தியாயம் முற்றும்.

ஸ்ரீ சத் குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

சுபம் உண்டாகட்டும்



No comments:

Post a Comment