valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 February 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

நரஜன்ம மகிமை -  பிச்சை எடுத்து உண்டது - பாயாஜாபாயி யின் ஒப்பில்லாத பக்தி - தாத்யாவுடனும் மகால்சாபதியுடனும் மசூதியில் உறங்கியது

கடந்த அத்தியாயத்தில், பாபா ஹிந்துவா முஸ்லீமா என்று எப்படி எவராலும் நிர்ணயிக்க முடியாது போயிற்று என்பதும் பாபா தம்முடைய வாசஸ்தலமாக ஆக்கிக் கொண்ட  ஷிர்டி வானளாவிய பாக்கியம் பெற்றது என்பதும் விவரித்துச்  சொல்லப் பட்டன

பாபா முதன் முதலில் ஓர் இளைஞனாக வந்து, பிறகு மக்களுக்கு ஒரு 'பைத்தியக்காரப் பக்கீராக' எவ்வாறு மாறினார் என்பது பற்றியும் கரடுமுரடான கரம்பு நிலத்தை ஓர் அழகான பூந்தோட்டமாக அவர் ஆகியது பற்றியும் -

சில காலத்திற்குப் பிறகு, அவ்விடத்தில் ஒரு சத்திரம் எவ்வாறு எழுந்தது, எவ்வாறு பாபா தோதி - போதி , கண்ட யோகம் போன்ற தைரியமான யோகப் பயிற்சிகளில் தலை சிறந்து விளங்கினார் என்பன பற்றியும்

பக்தர்களின் இரட்சகரான பாபா எவ்வாறு அவர்களுடைய துன்பங்களைத் தம்முடலில் ஏற்றுக் கொண்டு மெய் வருந்தினார்  எனபது பற்றியும், நான் எப்படிப் போதுமான அளவுக்கு வர்ணிப்பேன்?

நரஜன்மத்தை மகிமை, பாபா பிச்சை எடுத்த விவரம், ஞானிகளுக்கு பாயாஜாபாயி  செய்த தன்னலமற்ற சேவை, பாபா உணவு உண்ட விசித்திரம், இவற்றைப் பற்றியும்,

தாதா, மகால்சாபதி, பாபா, இம் மூவரும் எப்படி மசூதியில் உறங்கினர் என்பது பற்றியும் ரஹாதாவிலிருந்து குசால்சந்தின் இல்லத்திற்கு பாபா சென்ற பழக்கத்தைப் பற்றியும் மேற்கொண்டு கேளுங்கள்.

தினமும் காலையில் சூரியன் உதிக்கிறான் மாலையில் மறைகிறான். இவ்விதமாக வருடங்கள் விழுங்கப் படுகின்றன. பாதி வாழ்வு தூக்கத்தில் தொலைகிறது ;  மீதி பாதியும் சாந்தியையோ சந்தோஷத்தையோ கொண்டு வருவதில்லை.

பால பருவம் விளையாட்டில் கழிந்துவிடுகிறது இளமைப் பருவம் சிற்றின்பத்தில் கழிகிறது வயோதிகப் பருவம், தள்ளாமையும் வியாதிகளும் பலவிதமான அவஸ்தைகளும் தரும் அலுப்பிலும் சலிப்பிலும் கழிகிறது. 


No comments:

Post a Comment