valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 October 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

எப்படியிருப்பினும், இந்த வேலையும் பக்தர்களின் கடுமையான உழைப்பால் அம்முறையிலேயே (மசூதி தளம் பரவிய) அந்தச் சூழ்நிலையிலேயே இரவோடு இரவாக முடிக்கப்பட்டது.

பெருமுயற்சி எடுத்து பதர்கள் இரவில் இரும்புதூண்களை நட்டு நிலைப் படுத்துவார்கள். அடுத்த நாள் காலையில் பாபா தூண்களைப் பிடுங்க முயல்வார். நல்ல சமயமாகப் பார்த்து, பக்தர்கள் மறுபடியும் தூண்களை நிலைப் படுத்துவார்கள். இத் தொடர்முயற்சிகளே  அவர்களைச் சோர்வடையச் செய்தன.

எல்லாரும் கீழ்ப்பாய்ச்சியை இழுத்துக் கட்டிக் கொண்டு, இரவைப் பகலாக்கி, அவர்களுடைய இதயத்திலிருந்த ஒரு பெரும் ஆவலை தீர்த்துக் கொள்ளக் கடுமையாக உழைத்தனர்.

முதலில் இவ்விடம் (மசூதியின் எதிரில்) ஒரு சிறு முற்றம் அடங்கிய திறந்த வெளியாகவே இருந்தது. ஒரு கொட்டகை கட்டுவதற்குத் தகுதியான இடம் என்று தீட்சிதர் கருதினார்.

எவ்வளவு பணம் செலவானாலும் சரி, என்று தீர்மானம் செய்துகொண்டு இருப்புத் தூண்களையும் இரும்புக் கோணச் சட்டங்களையும் வாங்கினார்கள். இரவு படுத்துக் கொள்வதற்கு பாபா சாவடிக்குச் சென்றுவிட்டார் என்று தெரிந்த பிறகு, அவர்கள் வேலையை முடித்தார்கள்.

இரவு முழுவதும் பெருமுயற்சி செய்து  பக்தர்கள் இரும்புத் தூண்களை நட்டு நிலைப் படுத்துவார்கள். காலையில் சாவடியிலிருந்து திரும்பிவந்தவுடனே பாபா கம்பங்களை பிடுங்க ஆரம்பிப்பார்.

ஒருநாள் பாபா கடுங்கோபம் கொண்டார். ஒரு கையால் தாத்யாவின் கழுத்தை நெரித்துக் கொண்டே மறுகையால் ஒரு கம்பத்தை பிடுங்க முயற்சி செய்தார்.

இரும்புத் தூணை பலமாக ஆட்டி அதைப் பிடுங்கி விட்டார். பிறகு அவர் தாத்யாவினுடைய தலைப்பாகையை பறித்து, ஒரு தீக்குச்சியால் அதைக் கொளுத்தி கோபம் பொங்கக் குழிக்குள் விட்டெறிந்தார்.

அந்த சமயத்தில் அவருடைய கண்கள் நெருப்புக் கோலங்கள் போல ஜொலித்தன. அவருடைய முகத்தை நேருக்கு நேராக யாரால் பார்க்க முடிந்தது. எல்லாருமே நாடு நடுங்கி போனார்கள்.

சட்டென்று தம்முடைய பாக்கெட்டில் கையைவிட்டு, ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை எடுத்து, சுப காரியம் என்று குறிப்பளிப்பது போலக் குழியில் வீசி எறிந்தார்.

சாபங்களும் திட்டுகளும் வசையும் சரமாரியாக பொழிந்தன. தாத்யா மனதளவில் பயந்து நடுநடுங்கி போனார். ஓர் இக்கட்டான நிலைமை உருவாகிட்டது. இது எங்கனம் நடந்தது?


No comments:

Post a Comment