valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 11 October 2012

ஷிர்டி சாய் சத் சரிதம் 

பாலபுவாவும் தம்மைப் பொறுத்தவரை எண்ணம் நிறைவேறியது பற்றி மிக்க மகிழ்ச்சியடைந்தார். பாபா வுக்கும் சந்தோசம். எல்லாருடைய மனோரதமும் நிறைவேறியது.

புவாவுக்கு கனத்த சம்பாவனை கிடைத்தது. பாபாவின் ஆணைப்படி அவருக்கு நூற்றைம்பது ரூபாய் அளிக்கப்பட்டது. புவாவினுடைய மகிழ்ச்சி கரைபுரண்டது.

கவடேயில் ஐந்து வருடங்களில் கிடைக்ககூடிய வருமானத்தை பாபா ஒரே வருடத்தில் கொடுத்துவிட்டார். பாலபுவாவுக்கு ஏன் சந்தோசம் பொங்கி பாபாவிடம் விசுவாசம் அதிகரிக்காது?

ஆயினும், பின்னர் தாசகனு ஷீரடிக்கு ஒருமுறை வந்தபோது, ஸ்ரீ ராம நவமி கதாகாலட் ஷேபப் பொறுப்பு பாபாவின் அனுமதியுடன் அவரிடம் ஒப்படைக்கப் பட்டது.

அன்றிலிருந்து இன்றுவரை ஸ்ரீ ராம ஜன்மோர்சவம் கோலாகலமாக கொண்டாடப் படுகிறது. ஏழையிலும் ஏழைகள் உட்பட அனைவரும் ஆனந்தம் அடையுமாறு எல்லாருக்கும் அன்னதானம் செய்யப் படுகிறது.

அச்சமயத்தில் சமாதி மந்திரின் பிரதான வாயிலுக்கேதிரே மங்கள வாத்தியங்களின் முழக்கங்களுக்கு நடுவில் சாயி நாமம் வானைப் பிளக்குமாறு எழுந்து, அவர்களுடைய மனத்தில் ஆனந்த அலைகளை எழுப்புகிறது.

உருஸ் திருவிழா கொண்டாட்டம் ஆரம்பித்ததைப் போலவே, கோபால் குண்டுக்கு மசூதியை புனருத்தாரணம் செய்து அழகுபடுத்த வேண்டும் என்னும் யோசனையும் மனதில் உதித்தது.

மசூதி புனருத்தானம் செய்யப்பட வேண்டுமென்றும் அதையும் தம் கைப் படச் செய்யவேண்டுமென்றும்  கோபால் குன் தீர்மானம் செய்தார். வேலைக்கு வேண்டிய கற்களை தயார் செய்தார்.

ஆனால் கோபால் குண்டுக்கு இந்த சேவையை செய்யக் கொடுத்து வைக்க வில்லை என்று தெரிகிறது. பிறகு, பாபாவின் விருப்பப்படி இந்த வேலையைச் செய்து முடிக்க ஒரு நல்வாய்ப்பு அமைந்தது.

நானா சாஹேப் சாந்தோர்கர் இப்பணியை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் காகா சாஹேப் தீட்சிதர் தளம் பரவும் பணியை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் பாபா விரும்பியதாக இப்பொழுது தெரிகிறது.

சிறிது காலம் கழித்து அது அவ்வாறே நடந்தது. முதலில், பக்தர்கள் சோர்ந்து போகும் வரை திரும்பத் திரும்ப அனுமதி கேட்டும் பிரயோஜனமில்லாமல் போயிற்று. மஹால் சாபதி பரிந்துரை செய்யுமாறு வேண்டிக் கொள்ளப் பட்டார். இதன் பிறகே பாபா அனுமதி தந்தார்.

இரவோடு இரவாக தளம் போடப் பட்டது. அடுத்த நாளிலிருந்தே பாபா ஆசனமாக ஒரு சிறு மெத்தையை உபயோகிக்க ஆரம்பித்தார்.

1911  ஆம் வருடம் ஒரு சபா மண்டபம் கட்டப் பட்டது. ஆனால், ஓ! அது என்னே பகீரதப் பிரயத்தனம்.! என்ன உழைப்பு! எத்தனை தொந்தரவுகள்! இது போதாதென்று இவ்வேலை அவர்களுடைய பயத்தால் நடுங்க வைத்தது. 


No comments:

Post a Comment