valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 4 October 2012

ஷிர்டி சாயி சத் சரிதம் 

பாலபுவாவுக்கு இவ்விரண்டு உற்சவங்களுக்கு முப்பது ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட்டது. ஆனால், அவ்வருடம் கவடேயில் காலரா நோய் கண்டு, கிராம மக்கள் அவதிப் பட்டனர்.

அதனால், ஸ்ரீ ராம நவமி உற்சவம் கொண்டாட முடியவில்லை. மக்கள் கிராமத்தைக் காலி செய்து விட்டு வெளியில் போய் விட்டதாகவும் அடுத்த வருடம் வரச் சொல்லியும் புவாவுக்கு கடிதம் வந்தது.

சுருங்கச் சொன்னால், ஸ்ரீ ராமனுக்கு சேவை செய்யும் பாக்கியமும் சன்மானமும் புவாவிற்கு அவ்வர்டம் கிடைக்காமல் போய்விட்டன. ஆனால், அது அவருக்கு  ஷிர்டி செல்வதற்கு ஒரு நல் வாய்ப்பாக அமைந்தது. ஆகவே, புவா ஹரி சீதாரம் தீஷிதரை சந்தித்தார்.

தீஷிதர் பாபாவின் பரம பக்தராதலால், அவர் மனது வைத்தால் ஷிர்டிக்குப் போகும் விருப்பம் நிறைவேறும்; சொந்தக் காரியமும் நடக்கும். சுவாமி காரியுமும் நடக்கும் என்று அவர் நினைத்தார்.

அவர் தீஷிதரிடம் கூறினார், "இந்த வருடம் எனக்கு சன்மானம் கிடைக்காமல் போய் விட்டது. ஆகவே, நான் பாபாவை தரிசனம் செய்வதற்காகவும் கதாகாலட்ஷேபம் செய்வதற்காகவும் ஷிர்டி செல்லவேண்டுமென்று நினைக்கிறேன்".

தீஷிதர் பதில் கூறினார். "சன்மானம் கிடைக்குமென்று நிச்சயமாக சொல்லமுடியாது. கொடுப்பதோ இல்லையோ  பாபாவின் கையில்தான் இருக்கிறது. கதாகாலட்ஷேபம்  செய்வதற்கும் பாபாவின் சம்மதம் தேவை!".

இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்தபோதே காகா மகா ஜனி அங்கு வந்தார். சற்றும் எதிர்பாராமலேயே அங்கிருந்த அனைவருக்கும் ஷீரடியின் உதி பிரசாதத்தை அளித்தார். இது சுப சகுனமாக கருதப் பட்டது.

மகாஜனி அப்பொழுதுதான் ஷிர்டியிலிருந்து திரும்பி இருந்தார்; ஷீரடியில் அனைவரும் நலம் என்று தெரிவிப்பதற்காக அப்பொழுது அங்கு வந்தார்; சிறிது நேரத்தில் வீட்டிற்குத் திரும்பிவிட்டார்.

தாம் பாபாவை அனுமதி கேட்பதாகவும் அனுமதி கிடைத்தால் நிச்சயமாக அவருக்குத் தெரிவிப்பதாகவும் தீஷிதர் புவாவிடம் பரம பிரீதியுடன் சொன்னார்.

யாத்திரைச் செலவைப் பற்றிக் கவலைப் படாமல் ஷீரடிக்கு வரச் சொல்லி புவாவுக்கு ஒரு கடிதம் வந்தது; இதற்காக ஒருவர் மனத்தில் சந்தேகங்களை எழும்பிக் கொண்டு தொந்தரவுபடக் கூடாது என்ற குறிப்பும் இருந்தது.

சில நாள்களுக்குப் பிறகு தீஷிதர் ஷிர்டிக்குச் சென்றார்; பாபா தம்முடைய அனுமதியை அளித்தார். பாலபுவா ஷீரடிக்கு வந்தார்; யதேஷ்டமாக (மனம் திருப்தி அடையும் வரை) சாயி தரிசனம் செய்தார்.

பாபாவும் மிகுந்த பிரேமையுடன் ஸ்ரீ ராம நவமி உற்சவத்தை கோலாகலமாக கதாகாலட்சேபத்துடனும் பண்டிகைக் குதூகலத்துடனும் பாலபுவாவை வைத்துத் தம்முடைய முன்னிலையில் நடத்திக் கொண்டார். 


No comments:

Post a Comment