valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 27 September 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

'இன்னும் என்ன தேவை இருக்க முடியும்? ஆனால், சாயியின் திருவாய் மொழி என்றுமே சோடை போனதில்லையே?' என்று நான் யோசித்தேன். உற்சவம் இன்னும் சம்பூரணமாகவில்லை என்று என் மனத்துள் அப்போதுதான் உதித்தது.

அன்றைய உற்சவம் நடந்துவிட்டது; ஆனால், மறுநாள் 'கோபாலகாலா' நடக்காமல் உற்சவம் முடிந்துவிட்டது என்று எவ்வாறு சொல்ல முடியும்?

இப்படியாக, பஜனை, கோபால கலா எல்லாம் அடுத்த நாள் கொண்டாடப் பட்டன. இதெல்லாம் நடந்து முடிந்த பிறகு பாபா தொட்டிலை அவிழ்த்துவிட அனுமதியளித்தார்.

அடுத்த வருடம் காலட்சேபம் செய்ய பீஷ்மா கிடைக்கவில்லை. ஆகவே, பாலபுவா சாதார்கர் காலட்சேபம் செய்வதற்கு அணுகப்பட்டார். ஆனால், அவரோ 'பிர்ஹாட் சித்த கவடே' என்னும் ஊருக்கு காலத்ஷேபதிர்காகப்  போக வேண்டியிருந்ததால் அவரும் கிடைக்கவில்லை.

ஆகவே, காகா மகா ஜனி, நவீன துகாராம் என்று பிரசித்தி பெற்ற பால புவா பஜணியை அழைத்துக்கொண்டு வந்தார். ஸ்ரீ ராம் ஜன்ம உற்சவத்தை பாலபுவா பஜனி நடத்தி வைத்தார்.

அவர் கிடைக்காமல் போயிருந்தாலும் காக மஹா ஜனியே காலட்சேபம் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருப்பார். அவருக்கு தாச கணு இயற்றிய ஸ்ரீராம சனனக் காதைச் செய்யுள்கள் மனப்பாடம்.

மூன்றாவது வருடம் பாலபுவா சாதார்கரே சரியான சந்தர்ப்பத்தில் ஷீரடிக்கு வந்து சேர்ந்தார். இது எப்படி நடந்தது என்பதை கவனமாக கேளுங்கள்.

சாயி பாபாவின் கீர்த்தியைக் கேள்விப்பட்ட பிறகு பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவல் அவர் மனத் தெழுந்தது. அவருக்கு வழித்துணைக்கு ஒருவர் தேவை; துணை எப்படிக் கிடைக்கும் என்பதே அவருடைய சிந்தனையாக இருந்தது.

பாலபுவா ஒரு ஹரிதாசர்; சாதாரா என்னும் ஊரில் பிறந்தவர். ஆனால், அச்சமயத்தில் அவர் பம்பாய் நகரத்திலுள்ள பரேலில் வசித்து வந்தார்.

சாதாரா ஜில்லாவில் பிர்ஹாட் சித்த கவடே என்னும் தேவஸ்தானம் ஒன்று இருந்தது. ஸ்ரீ ராமநவமியன்று அங்கே கதாகாலட்சேபம் செய்வதற்காக சாதர்கர் வருடாந்திரமாக ஒரு மானியம் பெற்றுக் கொண்டிருந்தார்.

அந்த தேவஸ்தானத்துடன் அவருக்கு வருடாந்திரமாக இரண்டு உற்சவங்களுக்கு சம்பந்தம் இருந்தது; ஒன்று ஆடி மாத ஏகாதசி, இரண்டாவது சித்திரை மாதத்தின் ஸ்ரீ ராமநவமி;

மொகலாய சக்கரவர்த்தி (அக்பர்) ஏற்படுத்திய சாசனத்தின்படி நூற்று இருபது நான்கு ரூபாய், செலவுகளுக்காக அங்கீகாரம் செய்யப் பட்டிருந்தது. மூல சமஸ்தானத் திலிருந்து முறைப் படி இத்தொகை இந்தக் கோயிலின் குறிப்பிட்ட செலவுகளுக்காகப் பிரித்தளிக்கப்பட்டு இருந்தது. 


No comments:

Post a Comment