valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 June 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

தினமும் நடக்கும் வழக்கப்படி, பாபா எண்ணெய் கேட்டுக்கொண்டு வந்தபோது அனைவரும் எண்ணெய் இல்லையென்று சொல்லிவிட்டனர். என்ன அற்புதம் விளைந்தது!

ஒரு வார்த்தையும் பேசாமல பாபா திரும்பி விட்டார். பழைய திரிகளைச் சீர் செய்து அகல் விளக்குகளில் பொருத்தினார். எண்ணெய் இல்லாமல் இவர் என்ன செய்யப் போகிறார் என்பதைக் கடைக்காரர்கள் ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

பாபா தகர டப்பாவை மசூதியின் கைப்பிடிச் சுவரிலிருந்து எடுத்தார். அதில் ஓரிரு துளிகள் எண்ணெய் இருந்தது; ஒரு மாலை விளக்கு ஏற்றுவதற்குக் கூடப் போதாது.

அந்த எண்ணையில் தண்ணீரை ஊற்றி, இறைவனுக்கு அர்பணிப்பது போலக் குடித்து விட்டார். பிறகு, அவர் வெறும் தண்ணீரை எடுத்துக் கொண்டார்.

தண்ணீரை அகல் விளக்குகளில் ஊற்றித் திரிகளை நனைத்தார். விளக்குகளை ஏற்றி, அவை பிரகாசமாக எரிவதைக் காண்பித்தார்.

சுவாலையுடன் தண்ணீர் எரிவதைப் பார்த்த கடைகாரர்கள் வியப்பிலாழ்ந்தனர். பாபாவிடம் பொய் சொன்னது தவறு என்று தங்களுக்குள்ளேயே pesik கொண்டனர்.

அணுவளவும் எண்ணெய் இல்லாது விளக்குகள் இரவு முழுவதும் எரிந்தன. எல்லா ஜனங்களும், கடைக்கார்களும் பப்வின் அருளைப் பெறுவதற்கு அருகதையற்றவர்கள் என்று சொன்னார்கள்.

"ஓ, பாபா எவ்வளவு அற்புதமான சக்தி பெற்றவர்!" என்பர் கடைகாரர்கள் ஆச்சரியப்பட்டனர்; பொய் சொல்லிப் பாவம் சேர்த்தது மட்டுமல்லாமல் பாபாவை அனாவசியமாக கோபப்படும்படி  செய்துவிட்டதையும் உணர்ந்தனர்.

இது இப்படி இருப்பினும், சினத்துக்கும் வெறுப்புக்கும் அப்பாற்பட்ட பாபா இதைப் பற்றச் சிந்திக்கவில்லை. அவருக்கு நண்பனும் இல்லை, விரோதியும் இல்லை. அவரைப் பொறுத்தவரை எல்லா ஜீவராசிகளும் ஒன்றே.

(ஆசிரியர் மறுபடியும் காலத்தால் பின் நோக்கிப் போகிறார்)

மறுபடியும் அந்தக் காதையை விட்ட இடத்திலிருந்து தொடர்வோம். அதாவது, மொஹித்தீன் தாம்போலி பாபாவை மல்யுத்தத்தில் வென்ற நிகழ்ச்சியிலிருந்து தொடரும் அக் காதையைக் கவனமாகக் கேளுங்கள்.

மல்யுத்த நிகழ்ச்சி நடந்த ஐந்தாவது வருஷம், அஹமத் நகரவாசியும் ஜவஹர் அலி என்னும் பெயர் கொண்டவருமான பக்கிரி ஒருவர் தம் சிஷ்யர்களுடன் ரஹாதாவிற்கு வந்தார்.

வீரபத்திரர் கோயிலுக்கு எதிரிலிருந்த மைதானத்தில் கொட்டாரம் போட்டுத் தங்கினர். இந்தப் பக்கீர் பெரும் அதிர்ஷ்டசாலி.

அதிர்ஷ்டசாலியாக இல்லாமல் இருந்தால், அவருக்கு எப்படி சாயியைப் போன்ற புகழ்ப் பெற்ற, மகிழ்ச்சியளிக்கும் சிஷ்யர் கிடைத்திருப்பார்?

கிராமத்தில் அநேக
மக்கள் இருந்தனர்; அவர்களில் பலர் மராட்டியர். மராட்டியர்களில் பகூ ஸ்தாபல் என்ற ஒருவர் பக்கீருக்குச் சேவகராக ஆகிவிட்டார். 


No comments:

Post a Comment