valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 May 2012

ஷிர்டி சாயி சத் சரிதம்

இவ்வாறே, கண்காகீர் என்னும் வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த மிகவும் பிரபலமான கிருஹச்த பக்திமான், புந்தாம்பே என்னும் ஊரிலிருந்து அடிக்கடி ஷீரடிக்கு விஜயம் செய்வார்.

சாயி இரண்டு தோள்களிலும் மண் குடங்களைத் தூக்கி  கொண்டு கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வருவதை
 முதன்முதலில் பார்த்து, கங்காகீர்  ஆச்சரியமடைந்தார்.

பின்பு,  சாயீயை நேருக்கு நேராகச் சந்தித்தபோது, கங்காகீர்  புவா தெளிவாகவும் ஆணித்தரமாகவும் கூறினார், "இம் மனிதருள் மாணிக்கத்தின் கூட்டுறவைப்  பெற்ற ஷிர்டி, பாக்கியம் செய்த அதிருஷ்டம் வாய்ந்த கிராமம். 

"இன்று இவர் தோள்களின் மேல் குடம் தூக்கித் தண்ணீர் கொண்டு போகிறார். ஆனால், இந்த மனிதர் சாமானியமானவர் அல்லர். இந்த பூமி செய்த மிகப் பெரும் புண்ணியத்தால் இவர் இங்கு வந்திருக்கிறார். 

இதைப் போலவ, ஆனந்தனாதர் எனும் பெயர் கொண்ட பிரக்யாதி பெற்ற சாதுவும் 
பாபாவினுடைய அற்புதமான, தெய்வீகமான லீலைகள் நடக்கப் போவது பற்றி முன் கூடியே தெரிவித்திருந்தார். 

மகா பிரசித்தி  பெற்ற இந்த ஆனந்த நாதர், யேவலா  என்னும் கிராமத்தில் மடமொன்றை ஸ்தாபிதிருந்தார். ஷிர்டி மக்கள் சிலருடன் ஷீரடிக்கு வந்தார். 

ஆனந்த நாதர்  அக்கல் கோட்  மகாபுருஷரின்  சிஷ்யர் . அவர் சாயியை  நேருக்கு நேராக பார்த்த போது சந்தோஷத்தால் கூவினார். "இதோ ஒரு ரத்தினம், பிரத்யஷமான  ஒரு ரத்தினம்.

"இன்று யாராலும் கவனிக்கப் படாது குப்பைக்குள் அமிழ்ந்திருக்கலாம் . ஆயினும், இது ஒரு ரத்தினமே; கூழாங்கல் அன்று." ஞாபகத்தில் வையுங்கள். இவையே பாபா இளைஞராக இருந்தபோதே ஆனந்த நாதர் சொன்ன வார்த்தைகள் . 

"நான் சொன்ன இவ்வார்த்தைகளை நன்கு மனதில் வைத்துக் கொள்ளுங்கள். பிற்காலத்தில் உங்களுக்கு இது ஞாபகத்திற்கு வரும். " இவ்வாறு அவர் நடக்கப் போவதை முன்கூட்டியே தெரிவித்து விட்டு 
எவலாவிற்குத் திரும்பிச் சென்று விட்டார்.

சாயி அப்பொழுது எல்லாம் தலைமுடியை நீளமாக வளர்த்துக் கொண்டார்.  மொட்டை அடித்துக் கொள்ளவே மாட்டார். சாயி இளைஞனாக இருந்தபோது பயில்வானைப் போல் உடை 
அணிந்து கொண்டார்.

எப்பொழுது ரஹைதாவிற்குச் சென்றாலும் துலுக்கச் சாமந்திச் செடிகளையும் 
மல்லிகைச் செடிகளையும்  கொண்டுவருவார். தரிசு நிலத்தில் நட்டுத்  தவறாது தினமும் தண்ணீர் ஊற்றுவார்.



No comments:

Post a Comment